1 / 3Classic · 3 அத்தியாயங்கள்

This film is a perfect introduction to Jesus through the Gospel of Luke. Jesus constantly surprises and confounds people, from His miraculous birth to His rise from the grave. Follow His life through excerpts from the Book of Luke, all the miracles, the teachings, and the passion. God creates everything and loves mankind. But mankind disobeys God. God and mankind are separated, but God loves mankind so much, He arranges redemption for mankind. He sends his Son Jesus to be a perfect sacrifice to make amends for us. Before Jesus arrives, God prepares mankind. Prophets speak of the birth, the life, and the death of Jesus. Jesus attracts attention. He teaches in parables no one really understands, gives sight to the blind, and helps those who no one sees as worth helping. He scares the Jewish leaders, they see him as a threat. So they arrange, through Judas the traitor and their Roman oppressors, for the crucifixion of Jesus. They think the matter is settled. But the women who serve Jesus discover an empty tomb. The disciples panic. When Jesus appears, they doubt He's real. But it's what He proclaimed all along: He is their perfect sacrifice, their Savior, victor over death. He ascends to heaven, telling His followers to tell others about Him and His teachings.

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்தார். தேவன் உண்டாக்கின எல்லாவற்றையும் நாம் பார்க்கும் போது அது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தேவன் உண்டாக்கிய எல்லாம் நன்றாக இருந்தது. அவையெல்லாம் அவரின் மேன்மையையும், நற்குணத்தையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் சகல விதமான தாவரங்களையும், மிருகங்களையும் படைத்தார். பின்பு பூமியின் மண்ணில் இருந்து முதல் மனிதனை உருவாக்கினார். அவர் அவனின் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். இந்த முதல் மனிதன் ஆதாம் என்று அழைக்கப்பட்டான். பின்பு தேவன் ஆதாமுக்கு துணையாக ஒரு பெண்ணை உருவாக்கினார். அவள் ஏவாள் என்று அழைக்கப்பட்டாள். தேவன் தம்முடைய சாயலின்படியே ஆணையும், பெண்ணையும் உருவாக்கினார். எனவே அவர்கள் தேவனோடு நெருங்கிய உறவுகொண்டு ஏதேன் என்ற அழகிய தோட்டத்தில் அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அங்கு எவ்வித துக்கமோ, மரணமோ இல்லை. தேவன் ஆதாமிடம், “இந்த ஒரு மரத்தின் பழத்தைத் தவிர மற்ற எல்லா மரங்களின் பழங்களையும் சாப்பிடலாம். நீங்கள் அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் சாவீர்கள்.” என்று கூறினார். ஆனால் ஒரு நாள் சாத்தான் ஏவாளை ஏமாற்றி அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடத் தூண்டினான். அவள் அந்த பழத்தைத் தானும் சாப்பிட்டு தனது கணவனுக்கும் கொடுத்தாள்; அதை அவனும் சாப்பிட்டான்; இருவரும் புசித்த உடனே தேவனுடன் அவர்களுக்கு இருந்த உறவு முறிந்தது. தேவன் பரிசுத்தமானவர். பாவிகள் அவருடைய சமூகத்தில் வாழமுடியாது. எனவே, தேவன் ஆதாமையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினார். தேவனுக்கு கீழ்ப்படியாததினால் இவர்களுக்கு இந்த அவமானமும், வேதனையும் ஏற்பட்டது. இந்த கீழ்ப்படியாமையின் விளைவாக ஆதாம், ஏவாள் அவர்கள் சந்ததியினருக்கும் வேதனைகளும், மரணமும் ஏற்பட்டது. ஆனாலும் தேவன் மனிதர்களை நேசித்தார். அவர்கள் திரும்பவும் தன்னுடன் சேர்ந்து வாழும்படி விரும்பி அதற்கான ஒரு வழியை அவர் ஏற்கனவே ஆயத்தம்பண்ணி இருந்தார். மனிதர்கள் எப்பொழுதும் தேவனுடன் ஐக்கியமாக வாழ்வதற்காக, அவர்களுக்கான தண்டனையில் இருந்து அவர்களை மீட்கும்படியான தமது திட்டத்தைத் தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தேவன் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமிடம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்தினார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்து அவரை கனப்படுத்தினான். தேவன் அவனை ஆசீர்வதிப்பதாகவும், அவன் மூலமாக எல்லா மக்களையும் ஆசீர்வதிப்பதாகவும் வாக்குக்கொடுத்தார். அவனுக்கு கடற்கரை மணலைப் போலவும், வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும்… பல சந்ததிகளை உண்டாக்குவதாகவும் அவர் வாக்குகொடுத்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அந்த விசுவாசத்தினால் தேவன் அவனை நீதிமான் என்று அறிவித்தார். ஜனங்கள் அவனை ‘தேவனுடைய நண்பன்’ என்று அழைத்தனர். ஒரு நாள் தேவன், ஆபிரகாம் தன்னை விசுவாசிக்கிறானா, தன் கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறானா என்று பார்க்க அவனைச் சோதித்தார். அவர் ஆபிரகாமிடம் அவனுடைய மகனை பலிசெலுத்தும்படி கூறினார். தேவன் இந்த மகனின் மூலமாகத்தான் தனக்கு பல சந்ததிகளைக் கொடுக்கப்போவதாக வாக்குகொடுத்திருக்கிறார் என்று ஆபிரகாமிற்குத் தெரியும். ஆனாலும் அவன் தேவனை விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தான். அவன் தன் மகனைத் தேவனுக்கு பலியாக செலுத்த ஆயத்தமானான். ஆபிரகாம் தன் கையை நீட்டி கத்தியை எடுத்த போது, தேவன், “ஆபிகாமே, உன் மகனுக்கு தீங்கு செய்யாதே. நீ எனக்கு பயப்படுகிறவன் என்றும், எனக்கு கீழ்ப்படிகிறவன் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்றார். பின்பு ஆபிரகாம் அருகில் ஒரு ஆட்டுக்கடா இருப்பதைக் கண்டான். அதின் கொம்புகள் ஒரு புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. அப்பொழுது ஆபிரகாம் அந்த ஆட்டுக்கடாவை தனது மகனுக்கு பதிலாக அதை தேவனுக்கு பலியாகச் செலுத்தினான். தேவன் ஆபிரகாமின் மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவை கொடுத்தபோது, தேவன் மனிதர்களின் மேல் கொண்டுள்ள தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரின் அன்பு ஒரு நல்ல தகப்பன் தன்னுடைய மகன் மேல் வைத்துள்ள அன்பைப் போல இருக்கிறது. மனுக்குலத்திற்கு இறுதியான ஒரே பலியை கொடுப்பதற்கு அவர் கொண்டிருந்த தன்னுடைய திட்டத்தையும் வெளிப்படுத்தினார். ஆதாமின் சந்ததியாரின் பாவங்களையும், அவமானத்தையும் நீக்க அவர்களுக்கு பதிலாக மரிப்பதற்கு பாவமற்ற ஒருவரை தான் அனுப்பப்போவதாக வெகு காலத்திற்கு முன்பே தேவன் தீர்க்கத்தரிசிகளுக்கு வெளிப்படுத்தினார்; அவரை விசுவாசிப்பவர்கள் தேவனுடன் எப்பொழுதும் ஐக்கியமாக வாழ்வதற்கான வழியைத் திறக்கிறது. தீர்க்கத்தரிசிகள் அவரை ‘மேசியா’ என்று அழைத்தனர். இந்த மேசியா ஜனங்களை மீட்கவும், ராஜாவாகவும், தேவனுடைய நாமத்தில் அவர்களை என்றென்றும் ஆளவும் தேவன் இவரை அனுப்புவார் என்று தீர்க்கத்தரிசிகள் முன்னறிவித்தார்கள். மேசியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மேசியா செய்யப்போகிற காரியங்களையும், அவருக்கு நேரிடப்போகிற காரியங்களைப் பற்றியும் தீர்க்கத்தரிசிகள் முன்னறிவித்தார்கள். “நீர் என் குமாரன்” என்று தேவன் மேசியாவிடம் சொன்னதாக தாவீது ராஜா தீர்க்கத்தரிசனமாக முன்னுரைத்தார். இந்த நேச குமாரன் என்ற உறவானது மாமிச உறவைக் குறிக்காமல், தேவகுமாரன் என்ற தெய்வீக உறவையும், அவர் ஒரு இரட்சகராக, ராஜாவாக இவ்வுலகில் நிறைவேற்றப் போகிற செயலையும் குறிப்பிடுகிறது. “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று ஏசாயா தீர்க்கத்தரிசி தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தார். இந்த, தேவனுடைய நித்திய வார்த்தையானது மாம்சமாகி, மனித சாயலாக கன்னியின் வயிற்றில் உற்பத்தியாகி இவ்வுலகிற்கு தேவனாக வெளிப்பட்டது. இந்த மேசியா பெத்தலகேமில் பிறப்பார் என்றும் அவர் ராஜாவாக எருசலேமுக்குள் வரும் அவருடைய பவனியை பற்றியும் அவருடைய சீடர்களில் ஒருவனால் முப்பது வெள்ளி காசிற்காக அவர் காட்டிகொடுக்கப்படுவதை பற்றியும் தீர்க்கத்தரிசிகள் முன்னறிவித்தனர். மேசியா தம்மை தியாக பலியாக கொடுப்பார் என்றும், தேவன் அவரை மரித்தோரினின்று மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்புவார் என்றும் மேசியாவை “மனுஷ குமாரன்” என்றும். அவர் எப்படி தேவனுடைய சமூகத்திற்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மீண்டும் மேகங்களின் மேல் தேவ வல்லமையோடு திரும்பி வருவார் என்றும், அவர் என்றென்றும் எல்லா ஜனங்களையும் ஆளும்படியான அதிகாரத்தைத் தேவன் அவருக்குக் கொடுப்பார் என்றும் தீர்க்கத்தரிசிகள் முன்னுரைத்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தார். அவர் செய்த காரியங்களை கண்ட பின்னர் ஜனங்கள் இவர்தான் மேசியாவா என்று பேசிக்கொண்டார்கள் இயேசுவின் வாழ்க்கை மேசியாவை குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையை நிறைவேற்றியதா? இந்த திரைப்படம் இயேசு யார் என்பதையும் வேதத்தில் எழுதப்பட்டபடி அவர் சொன்ன மற்றும் செய்த செயல்களையும் காட்டுகிறது. இந்தப் படத்தில் ஒரு மனிதன் இயேசுவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயேசுவைப்போல் நடிப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை. ஆனால் இந்த திரைப்படமானது ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும், தேவன் வாக்குப்பண்ணின ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் எடுக்கப்பட்டது. அன்புள்ள தியோப்பிலுவே, எங்களுக்குள் நடந்த அநேக உண்மையான சம்பவங்களை நீர் அறிந்து கொள்ள வேண்டுமென்று இதை எழுதுகிறேன். அகஸ்துராயன் ரோமாபுரியில் அதிபதியாகவும், ஏரோது யூதேயா தேசத்தின் ராஜாவாகவும் அரசாளும் நாட்களில், தேவன் தமது தூதனாகிய காபிரியேலை நாசரேத்தூரில் வசித்த கன்னியிடம் அனுப்பினார், அந்த கன்னிகையின் பெயர் மரியாள். மரியாளே; பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய், நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. இது எப்படியாகும்? நான் ஒரு கன்னிகை. பரிசுத்த ஆவி உன்மேல் வரும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ள பிள்ளை உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார், அவருடைய ஆட்சிக்கு முடிவிராது. மரியாள், தன் சொந்தக்காரியான எலிசபெத்தை சந்திக்க சென்றாள், அவளும் அற்புதமாக கர்ப்பவதியாகியிருந்தாள். எலிசபெத்! மரியாளே, எனதருமை மரியாளே, பெண்களுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்! உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது! உனது வாழ்த்துதலை கேட்டவுடனே, என் வயிற்றிலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் மீட்பராகிய தேவனில் என் ஆவி களிகூருகிறது. இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். நாசரேத்து ஊரில் உள்ள அனைவரும் அறிய வேண்டியது என்னவென்றால், கலிலேயா, யூதேயா தேசத்தில் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படும்படி அகஸ்துராயன் கட்டளையிட்டிருக்கிறார். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மரியாள் யூதேயாவிலுள்ள பெத்லகேம் ஊருக்குத் தான் திருமண ஒப்பந்தம் செய்திருந்த யோசேப்புடன் பெயர் பதிவு செய்யும்படி சென்றாள், பெத்லகேமிலே அவர்களுக்குத் தங்க இடமில்லாதிருந்தது, ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ ஓர் எளிய மாட்டுத் தொழுவம். அப்பொழுது அந்த தேசத்தின் சில மேய்ப்பர்கள் இரவிலே வயல் வெளியில் ஆடுகளை காத்துக் கொண்டிருந்தார்கள், தேவதூதன் அவர்கள் முன் தோன்றினான். தெய்வீக மகிமை அவர்களைச்சுற்றிலும் பிரகாசித்தது. பயப்படாதிருங்கள், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். மேய்ப்பர்கள் அவ்விடம் விட்டு விரைந்து தொழுவத்தில் பிறந்த பாலகனை காணச் சென்றனர், கன்னித்தாய்க்கு பிறந்த மீட்பரின் பிறப்பின் நற்செய்தியை முதலில் பர்ப்பினவர்கள் இவர்களே; ஒரு வாரத்திற்குப் பிறகு விருத்தசேதனம் செய்யப்படும் நாளில், யோசேப்பும் மரியாளும் குழந்தைக்கு எருசலேம் தேவலாயத்தில் இயேசு என்று பெயர் சூட்டி தேவனுக்கு அர்ப்பணித்தனர், கிறிஸ்துவை காணும் முன் மரணம் அடையமாட்டார் என்று தேவ ஆவியானவர் வாக்களித்திருந்த பக்தியுள்ள ஒருவர் அங்கிருந்தார். அவர் பெயர் சிமியோன். ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சாமாதானத்தோடு அனுப்பிவிடுகிறீர். உம்முடைய மீட்பை என் கண்கள் கண்டது, இது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! மோசேயின் சட்டதிட்டத்தின்படி அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றின பின்பு, எருசலேமை விட்டு, நாசரேத்துக்குத் திரும்பி சென்றார்கள். இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது யோசேப்பும், மரியாளும் பஸ்கா பண்டிகை கொண்டாடும் படி அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார்கள், பண்டிகை முடிந்து வீடு திரும்பின போது, இயேசு தங்களுடன் இருப்பதாகவே நினைத்துச் சென்றனர். ஆனால் இயேசுவோ அங்கேயே தங்கிவிட்டார். அவர்கள் இயேசுவை தேடிக்கொண்டே பட்டணத்திற்கு திரும்பிப் போனார்கள். மூன்றாம் நாளில் எருசலேம் தேவலாயத்தில் போதகர்களோடும், சபை பெரியோர்களோடும் இயேசு உட்கார்ந்திருக்க கண்டனர். இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கும் இந்த சிறுவன் யார்? இவன் நாசரேத்தை சேர்ந்தவன், எங்களோடு வந்த இவன் பின்தங்கி விட்டான். தயவாக இவனை மன்னியுங்கள், அவர் பேச்சை கேட்ட யாவரும் ஆச்சரியப்பட்டார்கள். மகனே; எங்களுக்கு ஏன் இப்படி செய்தாய்? உன் அப்பாவும் நானும் அதிக கவலையோடு உன்னை தேடினோமே. நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? என் பிதாவுக்குரிய காரியங்களில் நான் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? பின்பு இயேசு அவர்களுடன் நாசரேத்துக்கு சென்று, ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் பெருகினார். திபேரியு ராயன் அரசாண்ட பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயா தேசாதிபதியாகவும், ஏரோது கலிலேயாவுக்கு அதிபதியாகவும், அன்னாவும், காய்பாவும் பிரதான ஆசாரியர்களாயும் இருந்த காலத்தில், வனாந்தரத்திலே யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவன் யோர்தான் ஆற்றுக்கு அருகிலுள்ள தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கு என்று மனந்திரும்புதலுக்கு எற்ற ஞானஸ்நானத்தை குறித்து பிரசங்கித்தான். உங்கள் பாவங்களை விட்டுத் திரும்புங்கள், ஞானஸ்நானம் பெறுங்கள், கர்த்தர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, வனாந்தரத்திலே ஒருவன் சத்தமிடுகிறான், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்கு பாதையை செவ்வைப்படுத்துங்கள், பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலான வழிகள் நேராக்கப்படும், கரடான வழிகள் ஒழுங்காக்கப்படும், எல்லா மனிதரும் தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆம்; நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குச் சொல்லும். விரியன் பாம்புக் குட்டிகளே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லும். உங்களிடம் இரண்டு உடைகள் இருந்தால், எவனுக்கு உடையில்லையோ, அதில் ஒன்றை அவனுக்கு கொடுங்கள் . உணவிருக்கிறவன் அதை பகிர்ந்து கொடு. போதகரே, நாங்கள் வரி வசூலிப்பவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அநியாயமாய் யாரிடமும் வரி வாங்காதீர்கள். அப்படியானால் நாங்கள் என்ன செய்யட்டும்? கட்டாயப்படுத்தி யாரிடத்திலும் பணம் வாங்காதீர்கள், யாரையும் பொய்யாய் குற்றம் சாட்டாதீர்கள், உங்களுடைய வருமானத்தில் திருப்தியாய் இருங்கள். எங்களுக்குச் சொல்லும், நீர் கிறிஸ்துவா? நீரினால் நான் ஞானஸ்நானம் கொடுக்கிறேன், ஆனால் என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரனல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார், தூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் கோதுமையை நன்றாய் புடைத்து களத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவ்ர் புறாவைப்போல் உருவம் கொண்டு அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாய் இருக்கிறேன். இயேசு தன் ஊழியத்தை ஆரம்பிக்கிறபோது 30 வயதுள்ளவராயிருந்தார், அவர் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவரால் வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டு, நாற்பது நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார், அந்த நாட்களில் அவர் ஒன்றும் உட்கொள்ளவில்லை. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி……. நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்த கல் அப்பமாகும்படி கட்டளையிடு. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டு போய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிடத்திலே காண்பித்து. இவை அனைத்தின் அதிகாரமும் மகிமையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, எனக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்க எனக்கு அதிகாரமுண்டு, நீ என் முன் விழுந்து என்ணை பணிந்து கொண்டால் அனைத்தும் உம்முடையதாகும். உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்றும் எழுதியிருக்கிறதே. பின்பு சாத்தான் அவரை எருசலேமுக்கு கொண்டு போய், தேவலாயத்தின் உச்சியில் நிறுத்தி நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கிருந்து தாழக் குதியும், ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்கு தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறதே. வேதம் சொல்லுகிறது உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சைபாராதிருப்பாயாக. பின்பு இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். மகளே ஐயா இயேசு தன் வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தேவாலயத்திற்குச் சென்றார், ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தக சுருளை வாசிக்கும்படி அவரை கேட்டுக் கொண்டார்கள். கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார், நற்செய்தியை அறிவிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்கு பார்வையை கொடுக்கவும் அவர் என்னை தெரிந்து அனுப்பி உள்ளார். நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அனுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார். இவர் நன்றாக பேசுகிறார். வாசிக்கக் கேட்ட, இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. என்ன வேத வாக்கியம் நிறைவேறியதா? அந்த வாக்குத்தத்தத்தை மேசியா மட்டுமே நிறைவேற்ற முடியும். நாங்கள் அதை எப்படி அறிவோம்? வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்னும் பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர் நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகளை உன் ஊரிலும் செய் என்று சொல்லுவீ ர்கள் என்பது நிச்சயம். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே ஏற்றுக்கொள்ளபடுவதில்லை. இந்த வார்த்தைகளினால் இயேசு தான் தேவனால் அனுப்பப்பட்டவராகவும் தம்முடைய ஜனங்களை மீட்க அனுப்பப்பட்ட மேசியாவாகவும் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் அந்த ஜனங்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்கள் அவரை மலையின் உச்சியிலிருந்து தலைகீழாகத் தள்ளிவிட கொண்டுபோனார்கள். அவரோ அவர்கள் நடுவிலிருந்து கடந்து போய்விட்டார். பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்திற்கு வந்தார். ரோமருடைய சர்வாதிகாரம் தேசமெங்கும் பரவி இருந்தது, அந்த கொடுமையிலிருந்து விடுதலை பெற மேசியாவை ஜனங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் . உனக்கு சமாதானம் உண்டாவதாக! உமக்கும் போதகரே! உன் படகை பயன்படுத்திக் கொள்ளலாமா, சீமோனே? தாராளமாக! என்ன பேசாமல் போய் விடுவாரோ? பேசும்; எங்களோடு பேசும்; எங்களோடு பேசும், இயேசுவே, எங்களோடு பேசும். இரண்டு மனிதர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன், பரிசேயன் நின்று இவ்வாறு ஜெபம் பண்ணினான். ஆண்டவரே! நான் பேராசைக்காரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர், ஆகிய மற்ற மனுஷரைப் போலவும் அந்த வரிவசூலிப்பவனைப் போல இல்லாததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரண்டு முறை உபவாசிக்கிறேன், என் வருவாயில் பத்திலொருபங்கை கொடுக்கிறேன். வரி வசூலிப்பவனோ தூரத்திலே நின்று தன் கண்களையும், வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு, ஆண்டவரே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும் என்று வேண்டினான். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பரிசேயனல்ல, வரிவசூலிப்பவனே நீதிமானாக்கப்பட்டவனாய் வீடு திரும்பினான். ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். படகை இன்னும் ஆழமான இடத்துக்குக் கொண்டு போங்கள், நீயும் உன்னுடனிருப்பவர்களும் மீன் பிடிக்கும்படி வலைகளை போடுங்கள். ஓ, ஆண்டவரே இரவு முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் எங்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனாலும் உமது வார்த்தையின்படியே, நான் வலையை போடுகிறேன், யாக்கோப்….. யோவான்…… யாக்கோப்…; யோவான்….; இங்க பாருங்க, எவ்வளவு மீன்கள்! சீக்கிரம், எங்களால முடியாது, எங்களுக்கு நிறைய கிடச்சிருக்கு. என்னைவிட்டு விலகிப் போங்கள், ஆண்டவரே, நான் ஒரு பாவியான மனிதன். பயப்படாதே, இனி மனிதர்களைப் பிடிக்கிறவனாயிருப்பாய். என்னிடத்தில் வாருங்கள், என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள், பொல்லாதவன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்திற்கு திரும்பக்கடவன், நம் தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். மனதுருக்கம் உடைய அவர், மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய் கொண்டு போகப்படுவீர்கள். இதோ பாருங்கள்; இயேசு வருகிறார், இதோ! இயேசுவே, இயேசுவே! என் ஒரே மகளை காப்பாற்ற வாரும்; இரக்கம் காட்டும்; அவளுக்கு 12 வயது தான் ஆகிறது. அவள் மரண வேதனைப்படுகிறாள். தயவு செய்து வாரும்; யவீருவே! வருந்துகிறேன்! இயேசுவே, உன் மகள் மரித்துப்போனாள், போதகரை கஷ்டப்படுத்த வேண்டாம். பயப்படாதே, நம்பிக்கையாயிரு, அவள் பிழைப்பாள். அழாதேயுங்கள்! அவள் மரிக்கவில்லை, உறங்கிக் கொண்டிருக்கிறாள். மகளே! எழுந்திரு! அவளுக்கு சாப்பிட ஆகாரம் கொடுங்கள், இங்கே நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம். இவைகளுக்கு பின்பு, இயேசு சுங்க சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருந்த லேவி என்னும் பெயருடைய மத்தேயுவை கண்டு என்னைப் பின்பற்றி வா. பின்பு இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின் மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபித்துக் கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது தம்முடைய சீடர்களில் பன்னிரண்டு பேரை தெரிந்து கொண்டு அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார். அவர்கள், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, மேலும் பர்தொலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, மேலும் துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. தரித்திரராகிய நீங்கள் விசேஷித்தவர்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது; பசியாயிருக்கிற நீங்கள் விசேஷித்தவர்கள், நீங்கள் திருப்தியாவீர்கள்; இப்பொழுது அழுகிற நீங்கள் விசேஷித்தவர்கள், இனி நகைப்பீர்கள்; மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள், உங்களைப் பகைத்து, நிந்தித்து, நீங்கள் பொல்லாதவர்கள் என்று தள்ளிவிடும்போது விசேஷித்தவர்களாயிருப்பீர்கள், அந்நாளிலே சந்தோஷப்பட்டு களி கூறுங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது, ….இருந்ததே இவ்வளவுதான் என்ன, இவ்வளவுதானா? கொடு பணக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ, உங்கள் ஆறுதலை அடைந்து தீர்ந்தீர்கள். அவன் செல்வந்தனாக விரும்பவில்லை, அவனுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்; எல்லாரும் உங்களை புகழ்ந்து பேசும் போது உங்களுக்கு ஐயோ, அவர்கள் பிதாக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். எனக்கு செவிக்கொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன். சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு. உன் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் கொடு, உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு. உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதை திரும்பக் கேளாதே. நீங்கள் பிறனிடத்தில் எதிர்பார்ப்பதை மற்றவர்களுக்கும் செய்யுங்கள். உங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகித்தால், உங்களுக்கு அதனால் பிரயோஜனம் என்ன? பாவிகளும் தங்களை சிநேகிக்கிறவர்களையே சிநேகிக்கிறார்களே; உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. அவர் எப்படி அவளைத் தொடலாம்? இவர் எப்படி அவளிடம் பேசலாம்? சே; அசிங்கம்! அப்படியில்லை, விரோதிகளை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், கைமாறு கருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது பெரும் பலன் கிடைக்கும். உன்னதமான தேவனுக்கும் பிள்ளைகளாயிருப்பீர்கள். அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. உங்கள் பிதாவை போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள். இயேசுவே, எங்களை இரட்சியும். குற்றம் தீர்க்காதீர்கள்; நீங்களும் தீர்க்கப்படமாட்டீர்கள். தண்டனைக்குள்ளாக்காதீர்கள். நீங்களும் தண்டிக்கப்பட மாட்டீர்கள். மன்னியுங்கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். உமது வழியிலே எங்களை நடத்தும் போதகரே. கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; நீங்கள் அளக்கின்ற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். குருடனுக்கு குருடன் வழிக்காட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன? போதகரே; எங்களை வழிநடத்தும். போதகரே, இப்பொழுது நீர் எங்களுக்குத் தேவை. உம்மைப் பெற்றெடுத்து, வளர்த்த தாய் எவ்வளவு பாக்கியவதி! தேவனுடைய வார்த்தையை கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே பாக்கியவான்கள். இவரைப்பற்றி நான் அறிய விரும்புகிறேன். இவர் மேசியாவாக இருப்பாரென்று … நீ நினைக்கிறாயா? இந்த பரிசேயன் இயேசுவை தன்னுடன் விருந்துண்ண அழைத்தான். இயேசு அவன் வீட்டிற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தார். பிள்ளைகளே, போய் விடுங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள், போங்கள். இவர்கள் மிகவும் குறும்புகாரர்கள்; எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவள் இங்கு என்ன செய்கிறாள்? எனக்கு தெரியாது? இவள் என்ன செய்கிறாள்? இவர் மெய்யாகவே தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மைத் தொடுகிற இவள் யாரென்று அறிவார், இவளுடைய பாவ வாழ்க்கை எப்படிப்பட்டதென்றும் அறிந்திருப்பார். இந்த ஸ்திரீ யார் என்று அறிவேன், சீமோனே! உனக்கொரு காரியம் சொல்ல வேண்டும். ஒருவனிடத்தில் இரண்டு பேர் கடன்பட்டிருந்தார்கள், ஒருவன் ஐந்நூறு வெள்ளி காசும், மற்றவன் ஐம்பது வெள்ளி காசும். கொடுக்க அவர்களுக்கு முடியாத போது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? நான் நினைக்கிறேன், அதிகமாய் மன்னிக்கப்பட்டவனே என்று. சரியாய் சொன்னாய், இந்த ஸ்திரீயை பார்க்கிறாயே, நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து தலை முடியினால் அவைகளைத் துடைத்தாள். நீ எனக்கு முத்தஞ் செய்யவில்லை. இவளோ வந்ததிலிருந்து என் பாதங்களை ஓயாது முத்தஞ் செய்தாள், நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமள தைலம் பூசினாள். நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதால், மிகவும் அன்பு கூர்ந்தாளே, எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூறுவான். உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது, என்ன? உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ. யார் இந்த மனிதன்? பாவங்களை மன்னிக்கிறாரே! பின்பு இயேசு, பிரயாணம் செய்து தேவனுடைய இராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து வந்தார். பன்னிரெண்டு சீஷர்களும், பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகதெலேனா மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் அவருடன் இருந்தனர். கலிலேயாவில் ரோம ஆட்சியாளராக நியமிக்கபட்டிருந்த ஏரோது, தன் சகோதரனின் மனைவியான ஏரோதியாளிடமிருந்த தவறான உறவை யோவான் கண்டித்ததினால் அவனை சிறையில் அடைத்திருந்தான். வாங்க, நாங்கள் நாயீன் ஊர் வாசலை சமீபித்தபோது, மரித்த ஒருவனை அடக்கம் பண்ண கொண்டுவந்தார்கள், அவன் அந்த விதவைக்கு ஒரே மகன். இயேசு அவளைப் பார்த்து மனதுருக்கம் நிறைந்தவராய் அந்த பாடையைத் தொட்டு வாலிபனே! எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார், உடனே மரித்தவன் எழுந்து உட்கார்ந்தான், இயேசு அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். அவரிடம் கேள். சரி. வருவார் என்று யோவான் சொன்னது நீர்தானா? இல்லை, வேறொருவருக்காக காத்திருக்க வேண்டுமா? போதகரே, போதகரே, வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானகன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார். யோவானிடம் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் அறிவியுங்கள், குருடர் பார்வையடைகிறார்கள், முடவர் நடக்கிறார்கள், சந்தேகமில்லாமல் என்னை நம்புகிறவன் பாக்கியவான். அப்பா என்னை மேல தூக்குங்க, என் தோள்மேல் ஏறிக்கொள், இப்போது தெரிகிறதா? ஆ! இயேசு தெரிகிறார். விதைக்கிறவன் ஒருவன் விதைக்கச் சென்றான். அவன் விதைக்கையில் சில விதைகள் பாதையில் விழுந்து மிதியுண்டன. வானத்துப் பறவைகள் வந்து அதை தின்று விட்டன. சில விதைகள் கற்பாறையின் மேல் விழுந்தன. அது முளைத்த பின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்து போயின. சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் கூடவே வளர்ந்து அதை நெருக்கிப் போட்டன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து செடி வளர்ந்து நூறு… மடங்காக அதிக பலனை தந்தன. போதகரே! ஜனக்கூட்டம் அருகில் இருக்கும் போதெல்லாம் ஏன் உவமைகள் மூலமாக பேசுகிறீர்? தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணதவர்களாகவும் கேட்டும் உணராதவர்களாகவும் இருக்க அவைகள் உவமைகளாக சொல்லப்படுகிறது. அந்த உவமையின் கருத்து இதுவே. விதை என்பது தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள், வசனத்தை கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு பிசாசு அந்த வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். கற்பாறையின் மேல் விதைக்கப்பட்டவர்கள், கேட்கும் போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாத படியினால் சோதனைக் காலம் வரும்போது பின் வாங்கிப் போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள், வசனத்தை கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள், கேட்டவர்கள் உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு பலன் கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள், வசனத்தை கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்தில் காத்துப்பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். ஒருவனும் விளக்கை ஏற்றி பாத்திரத்தால் மூடி கட்டிலின் கீழ் வைக்கமாட்டான், உள்ளே பிரவேக்கிறவர்கள் வெளிச்சத்தை காணும் படி அதை விளக்குத் தண்டின் மேல் வைப்பான். வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிவராத மறை பொருளுமில்லை. ஆகவே நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள், உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். போதகரே! உமது தாயாரும் சகோதரரும் உம்மை பார்க்க வேண்டும் என்று வெளியே நிற்கிறார்கள். தேவனுடைய வசனத்தை கேட்டு நடப்பவர்களே எனக்கு தாயும், சகோதரருமாய் இருக்கிறார்கள். ஒரு நாள் இயேசு தம் சீஷரோடு படகில் ஏறி, கடலின் அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்றார். அப்படியே புறப்பட்டுப் போகையில் இயேசு படகில் உறங்கிக் கொண்டிருந்தார். ஆண்டவரே! ஆண்டவரே! இயேசுவே! நாங்கள் சாகப் போகிறோம், அலைகள் எங்களை மூழ்கடிக்கின்றன. ஆண்டவரே, எங்களை காப்பாற்றுங்க!…. நாம் காப்பாற்றப்பட்டோம். உங்கள் விசுவாசம் எங்கே? அவர்கள் பயணம் செய்து கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டிற்கு போய் சேர்ந்தார்கள். இயேசுவே, உன்னதமான தேவ குமாரனே, என்னிடத்தில் உமக்கு என்ன வேண்டும்? உம்மை வேண்டுகிறேன். என்னை வேதனைப்படுத்தாதேயும். உன் பெயர் என்ன? லேகியோன். ஆண்டவரே, நாங்கள் பாதாளத்திலே போகாதபடிக்கு எங்களை அதோ அந்த பன்றிகளுக்குள் அனுப்பி விடும். ஏய்! இங்கே வா. ஏய்! நில்லு. அப்படியே பிசாசுகள் அந்த மனிதனை விட்டு பன்றிகளுக்குள் புகுந்தன. இங்கிருந்து போய் விடு. மந்திரவாதியே போயிடு. எங்களை விட்டுவிடு. இந்த இடத்தை விட்டுப் போ; எங்களை விட்டுவிடு. இங்கிருந்து போய் விடு. நீர் எங்கு சென்றாலும், உம்முடன் வருவேன். உம்மோடு வருவதற்கு என்னை அனுமதியும். உன் வீட்டிற்கு போ. தேவன் உனக்கு செய்தவைகளை எல்லாம் சொல். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தனித்திருக்க பெத்சாயிதா எனும் ஊருக்குச் சென்றனர். ஜனங்கள் அதை அறிந்து அவரை பின்தொடர்ந்தனர். சாயுங்காலமான போது, பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே, இந்த ஜனங்களை அனுப்பி விடும். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று தங்குமிடத்தையும் உணவையும் பார்த்துக் கொள்ளட்டும், இது ஜன நடமாட்டமில்லாத இடம். நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள். ஆனால் எங்களிடம் இருப்பதோ ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான். தேவனாகிய கர்த்தாவே! சர்வலோக இராஜாவே! பூமியிலிருந்து பலனை விளையச்செய்கிறவரே! உமக்கே மகிமை உண்டாவதாக! ஆ! இது ஒரு அற்புதம்; நம்பவே முடியல. ஜனங்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்? சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்று சொல்கிறார்கள், இன்னும் சிலரோ உம்மை எலியா என்று சொல்கிறார்கள், வேறு சிலரோ ஆதிகாலத்து தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிரோடு மீண்டும் வந்து விட்டார் என்கிறார்கள். நீ என்ன சொல்லுகிறாய்? என்னை யார் என்று நினைக்கிறாய்? நீர் தேவனாகிய கிறிஸ்து! நீங்கள் அதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம். மனுஷகுமாரன் பாடுகள் படவும், ஆகாதவர் என தள்ளப்படவும் கொல்லப்படவும் வேண்டும். ஆனால் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும். உங்களில் யார் என்னோடு வருவீர்கள்? நான் உம்மைப் பின்பற்றி வருவேன், ஆண்டவரே! ஆனாலும் முதலில் நான் போய் என் வீட்டாரிடம் விடைபெற்று வருகிறேன். கலப்பையின் மேல் கையை வைத்து திரும்பிப் பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல. ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை தினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை காப்பாற்ற விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை மீட்டுக் கொள்வான். மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டு தன்னையே கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளை குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக் குறித்து மனுஷ குமாரனும் தன்னுடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும் போது வெட்கப்படுவார். மெய்யாகவே சொல்லுகிறேன். இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய இராஜ்ஜியத்தை காணுமுன், மரணத்தை ருசிப்பதில்லை. பின்பு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு, ஜெபம் பண்ணும்படி மலையின்மேல் ஏறினார், அவர் ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறி அவருடைய உடை வெண்மையாகி பிரகாசித்தது. திடீர் என்று மோசேயும் எலியாவும் மகிமையோடே தோன்றி அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். நீர் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவீர். நீர் எருசலேமில் மரணமடைவீர். அவர்கள் புறப்படுகையில் பேதுரு இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எவ்வளவு நல்லது. இங்கேயே மூன்று கூடாரங்களை போடுவோம், பேதுரு பேசுகையில் ஒருமேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது, அப்போது சீஷர்கள் பயந்தார்கள். உடனே மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என் நேசகுமாரன், இவர்க்கு செவி கொடுங்கள் என்று உரைத்தது. போதகரே! போதகரே! என் மகனைக் கண்ணோக்கிப் பாரும்! தயவு செய்து அவனுக்கு உதவி செய்யும், அவன் எனக்கு ஒரே மகன், அவனை குணமாக்க உமது சீஷரை வேண்டிக் கொண்டேன், அவர்களால் முடியாமல் போயிற்று. விசுவாசமில்லாத முரண்பாடான சந்ததியே! எது வரைக்கும் நான் உங்களோடிருந்து பொறுமையாயிருப்பேன்? உன் மகனை கொண்டு வா. அவனது முகத்தில் எவ்வளவு மாற்றம்? என்ன ஆச்சரியம்! யோவான் தம் சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தது போல, எங்களுக்கும் கற்றுத்தாரும். நீங்கள் ஜெபிக்கும் போது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும், நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே. எங்களை சோதனைக்குட்பட பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று ஜெபியுங்கள். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்: தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிற எவனுக்கும் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன், மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானோ? அல்லது முட்டையைக் கேட்டால், தேளைக் கொடுப்பானோ? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. காகங்களை கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, அவைகளுக்கு பண்டகசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். பறவைகளை பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கவலைப்படுவதினால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான்? மிக அற்ப காரியத்தையே உங்களால் செய்யக் கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுவதென்ன? காட்டு மலர்களை பாருங்கள், எப்படி வளருகின்றன? அவைகள் உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை என்றாலும் சாலமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளைப் போல உடுத்தியிருந்ததில்லை, இப்படியிருக்க அற்ப விசிவாசிகளே, இன்றைக்கு காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு, தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயம் அல்லவா? எங்கள் விசுவாசத்தை பெருகச்செய்யும். கடுகு விதையளவு உங்களுக்கு விசுவாசம் உண்டாயிருந்தால், நீ இந்த காட்டத்தி மரத்தை நோக்கி நீ வேரோடே பிடிங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல அது உங்களுக்கு கீழ்ப்படியும். இடறல்கள் வராமல் போவது கூடாத காரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குவதை பார்க்கிலும் அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன், சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது அவனுக்கு நலமாயிருக்கும். தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது? அது கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது, ஒரு மனிதன் கடுகு விதையை எடுத்து தன் தோட்டத்திலே நட்டான் அது வளர்ந்து பெரிய மரமாயிற்று, ஆகாயத்துப் பறவைகள் வந்து,அதின் கிளைகளில் அடைந்தது, இவர் எதைப் பற்றி பேசுகிறார் என்றே எனக்கு புரியவில்லை. வரி வசூலிக்கிறவர்களோடும், பாவிகளோடும் சேர்ந்து, நீர் ஏன் உண்ணவும் குடிக்கவும் செய்கிறீர்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வரவில்லை, பாவிகளையே அழைக்க வந்தேன். தேவ இராஜ்யத்தைக் குறித்து எங்களுக்குச் சொல்லும், இன்னும் ஏதாகிலும் உண்டா? பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு இராஜ்யத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார், உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள், பழமையாய் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்கு சம்பாதித்து வையுங்கள். அங்கே திருடன் அணுகுவதுமில்லை, பூச்சி கெடுப்பதுமில்லை, உங்கள் பொக்கிஷம் எங்கேயோ, அங்கேயே உங்கள் மனமும் இருக்கும். ஸ்திரீயே, உன் நோயிலிருந்து விடுதலையாக்கப்பட்டாய். பாருங்கள், பாருங்கள், இவள் குணமாகி விட்டாள்! என்ன அற்புதம்! இவள் குணமடைந்து விட்டாள்! ப…. ப…..பதினெட்டு வருஷமா பட்டபாடு எல்லாம் முடிஞ்சது. ஸ்தோத்திரம்! என்னால் நம்ப முடியல. உமக்கு நன்றி! நாம் வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன, நீ அந்த நாட்களில் வந்து குணமாகிக் கொள், ஆனால் ஓய்வு நாட்களில் மட்டும் வரக்கூடாது. மாயக்காரரே, உங்களில் எவனும் ஓய்வு நாளில் தன் எருதையாவது கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்து அதற்குத் தண்ணீர் காட்டுவதில்லையா? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்த கட்டிலிருந்து அவிழ்த்து விட வேண்டியதில்லையா? நல்ல போதகரே, மோட்ச வாழ்வை அடைவதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்னை ஏன் நல்லவன் என்று அழைக்கிறாய்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. கற்பனைகளை அறிந்திருக்கிறாயே. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக. நான் என் சிறுவயது முதல் இவைகளையெல்லாம் கைக் கொண்டிருக்கிறேனே. இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உன்னுடையதை எல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னை பின்பற்றி வா. ஆனால், நாங்கள் வியாபாரிகள், ஐசுவரியவான்கள். ஐசுவரியவான்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிது, ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிது. அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும்? மனுஷரால் கூடாதவைகள் எவைகளோ அவைகள் தேவனால் கூடும். குறிப்பாக தேவனுடைய இராஜ்யம் எங்கே இருக்கிறது? தேவனுடைய இராஜ்யம் பார்க்கிறபடி வராது. இதோ, இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்ல ஏதுவிராது, இதோ தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே. மனுஷ குமாரனுடைய நாட்களிலொன்றைக் காண வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படும் காலம் வரும், ஆனால் அதை காண மாட்டீர்கள். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறு திசை வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார், அதற்கு முன்பு அவர் இந்தச் சந்ததியினரால் நிராகரிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் காண்கிறவைகளை காணும் கண்கள் பாக்கியம் உள்ளவைகள். நான் சொல்லுகிறேன் அனேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளை காணவும் கேட்கவும் விரும்பியும் காணாமலும் கேளாமலும் போனார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன? உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் முழு சிந்தனையோடும் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக! நீ சொல்வது சரி அப்படி செய்தால் பிழைப்பாய். எனக்கு பிறன் யார்? அந்த சேவர்கள் அல்ல. அப்படியென்றால் இராயன்? ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவன் உடைகளை உரிந்து கொண்டு அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப் போனார்கள், அப்பொழுது தற்செயலாய் ஒரு மதத் தலைவன் அந்த வழியே வந்து அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனான், அந்தப் படியே ஒரு ஆலய பணியாளர் அந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டு அவனும் பக்கமாய் விலகி போனான். பின்பு ஒதுக்கப்பட்ட சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவன் காயங்களில் எண்ணையும் திராட்சை ரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி அவனைத் தன் கழுதையின் மேல் ஏற்றி சத்திரத்திற்கு கொண்டுபோய் பராமரித்தான், மறுநாளிலே தான் புறப்படும் போது இரண்டு பணத்தை சத்திரக்காரன் கையில் கொடுத்து நீ அவனை விசாரித்துக் கொள், அதிகமாய் ஏதாவது செலவழித்தால் தான் திரும்பி வரும் போது தருவேனென்றான், இப்படியிருக்க கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்று பேரில் எவன் உதவியாய் இருந்தான்? அவனுக்கு இரக்கம் காட்டியவனே. நீயும் போய் அப்படியே செய். அஹ! சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள் அவர்களை தடை பண்ணாதீர்கள், தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், எவன் ஆகிலும் சிறு பிள்ளையை போல தேவனுடைய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதில் பிரவேசிக்க மாட்டான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை ஏற்றுக் கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்கிறான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். ஐயா என்ன நடக்கிறது? இங்கே யார் போவது? நசரேயனாகிய இயேசு இந்த வழியே கடந்து போகிறார். இயேசுவே! இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்! நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? நான் பார்வையடைய வேண்டும். பார்வையடைவாயாக! உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. என்னால் பார்க்க முடிகிறது! எல்லாம் தெரிகிறது! என்னால் பார்க்க முடிகிறது! தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு எருசலேமுக்கு போகும் வழியில் அநேகர் அவரை சந்தித்தனர், ஜனங்கள் அவரிடம் வந்து மீட்கப்படுவதற்கான வழியையும், தேவனுடைய ராஜ்யத்தையும் குறித்து அதிகமாகத் தங்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். இவர் மெய்யாகவே ஒரு தீர்க்கதரிசி. என் ஆண்டவரே! என்னை இரட்சியும். தேவனே, எங்களை இரட்சியும், எங்களை இரட்சியும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஆண்டவரே, மெய்யான வழியை எங்களுக்கு காட்டும். எரிகோ என்னும் ஊரிலே சகேயு என்னும் பெயர் கொண்ட வரி வசூலிப்பவன் இருந்தான், அவன் இயேசுவைப் பார்க்க விரும்பி ஜனக் கூட்டத்தின் நிமித்தம் ஒரு மரத்தின் மேல் ஏறினான். அவன் தான் வரி வசூலிப்பவன். சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும். என் வீட்டிலா? அவனுடைய வீட்டில் யார் தங்க விரும்புவார்கள்? இயேசுவை சகேயுவிற்கு எப்படி தெரியும்? கேளுங்கள்! என்னுடைய ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்! நான் யாரிடமாவது அநியாயமாய் எதையாகிலும் வாங்கியிருந்தால் நாலத்தனையாகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்…..ம் என்ன! வரி வசூலிக்கும் ஒருவன் அதைத் திரும்பக் கொடுக்கிறானா? என்னால் நம்ப முடியவில்லையே. இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமின் குமாரனாயிருக்கிறானே, இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். கேளுங்கள். நாம் எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்கதரிசிகளால் எழுதப்பட்டவைகள் அங்கே நிறைவேறும் அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவரை பரியாசம் பண்ணி அவரை நிந்தித்து, முகத்தில் துப்புவார்கள், வாரினால் அடித்து கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார். மனுக்குலத்தின் பாவத்திற்காகத் தாம் அங்கே பலியாக போவதை இயேசு அறிந்திருந்த போதிலும், எருசலேமுக்குப் போகும் வழியை தெரிந்து கொண்டார், அவர் வருவதை கண்ட அநேக ஜனங்கள் சந்தோஷப்பட்டு அவரைத் தங்கள் ராஜா என்று புகழ்ந்து கூறினார்கள். போதகரே, அமைதியாய் இருக்கும்படி உமது சீஷர்களுக்குக் கட்டளையிடும். இவர்கள் அனைவரும் பேசாமலிருந்தால் இந்த கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உன்னதத்திலே மகிமை! இவரே சமாதான பிரபு! இயேசு எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அதைக் கண்டு அதற்காக கண்ணீர் விட்டார். உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும். இப்பொழுது அவைகள் உன் கண்களுக்கு மறைவாய் இருக்கிறது. உன் சத்துருக்கள் உன்னை சுற்றி மதில் எழுப்பி, உன்னை வளைந்து கொண்டு எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி அழித்து விடுவார்கள். உன்னையும் உன்னில் உள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கி போடுவார்கள். உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு செய்யும் நாட்கள் உனக்கு வரும். ஏனென்றால் உனக்கு கிடைத்த தருணத்தை நீ இழந்து விட்டாய். எருசலேமிலிருந்த பரிசுத்த தேவாலயம், ஜெபவீடாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு வியாபார சந்தையாக மாறியிருந்தது. என்னுடைய வீடு ஜெப வீடாயிருக்கிறது என்று எழுதியிருக்கிறதே, நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்களே. அவன் என் மிருங்களை துரத்த வருகிறான், நிறுத்துங்கள்! அவனை நிறுத்துங்கள்! காவல்காரர்களை கூப்பிடுங்கள்! சீக்கிரம் கூப்பிடுங்கள்! ஜனங்கள் இயேசுவை ராஜா என்று அழைக்க தொடங்கியதால், சில அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு இடையே எதிர்ப்பு வளர்ந்தது. அவனைப் பலரும் ராஜா என புகழ்வதை நான் அறிகிறேன். ராஜா! அஹ் அஹ் அஹ்! கள்ளர்கள் பாவிகள் பிச்சைகாரர்களுக்கு இவன் ராஜா, இவனைப்போல் பலரை பார்த்திருக்கிறோம். வருவார்கள், போவார்கள், மறைந்து விடுவார்கள். அசதியாயிராதே, அவனை பின்பற்றுகிறவர்கள் பெருகுகிறார்கள், ஜனங்கள் அவனை புகழ்கிறார்கள். அவனை ராஜாவாக நினைக்கிறார்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன், இந்த மனிதனால் சமாதான குலைச்சல் ஏற்பட்டால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பாளி. அவர் கூறுவது உண்மைதான், கலிலேயனைப் பிடிப்பதற்கு இது சரியான சந்தர்ப்பம். மாய்மாலமான பரிசேயரையும் வேதபாரகரையும் கண்டித்து உணர்த்துவதைக் கண்டு யூதர்களில் அநேகர் அவரை பின்பற்றினார்கள். அவரை விரோதித்தவர்களின் கூட்டமும் பெருகியது. இயேசு தேவாலயத்தில் இருக்கும்போது ஒரு ஏழை விதவை இரண்டு காசு காணிக்கை செலுத்துவதை பார்த்தார். இது மிகவும் குறைவு! இதைவிட அதிகமாக உன்னால் கொடுக்க முடியாதா? நான் சொல்லுகிறேன், இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாய் கொடுத்து விட்டாள். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்து தேவனுக்கென்று காணிக்கை கொடுத்தார்கள், இவளோ, தன் வறுமையிலிருந்து, தன் ஜீவனத்துகுண்டாயிருந்த தெல்லாம் கொடுத்துவிட்டாள். எங்களுக்கு சொல்லும். இவைகளை சொல்ல என்ன அதிகாரம் உண்டு? இந்த அதிகாரத்தை உனக்குக் கொடுத்தவர் யார்? நான் ஒரு கேள்வி கேட்கிறேன், யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ அல்லது மனிதனால் உண்டாயிற்றோ? நாம் என்ன சொல்வது? தேவனிடத்தில் இருந்து உண்டாயிற்று என்றால். ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். மனுஷரால் உண்டாயிற்று என்று சொன்னால், ஜனங்கள் நம்மைக் கல்லெறிவார்கள். ஏனென்றால் இவர்கள் யோவானை தீர்க்கதரிசி என்று எண்ணுகிறார்கள். யாரிடத்திலிருந்து உண்டாயிற்று என்று எங்களுக்குத் தெரியாது. நானும் இன்ன அதிகாரத்தால் இவைகளைச் செய்கிறேன் என்று கூறப்போவதில்லை. ஒரு மனுஷன் ஒரு திராட்சத் தோட்டத்தை உண்டாக்கி, அதைக் குத்தகைக்கு விட்டு, நெடுநாளாக புறத்தேசத்துக்கு போயிருந்தான். கனிகளின் தன் பாகத்தை கொடுத்து அனுப்பும்படி, ஒரு ஊழியக்காரனை அனுப்பினார். அந்தத் தோட்டக்காரர் அந்த ஊழியக்காரனை அடித்து அவனை வெறுமையாக கனி ஏதும் இன்றி அனுப்பி விட்டார்கள். வேறொரு ஊழியனை அனுப்பினார். அவனையும் அவர்கள் அடித்து அவமானப்படுத்தி வெறுமையாக அனுப்பி விட்டார்கள் மூன்றாம் தரம் ஒர் ஊழியக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள், அப்பொழுது திராட்சத் தோட்டத்தின் ஏஜமான், நான் என்ன செய்யலாம்? எனக்கு பிரியமான குமாரனை அனுப்புவேன். அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள், தோட்டக்காரர் அவனை கண்ட போது, இதோ சுதந்திரவாளி. சுதந்திரம் நம்முடையதாய் இருக்கும்படி, இவனை கொல்லுவோம், வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். பிறகு என்ன நடந்தது? பின்பு திராட்சத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொன்றார்கள். இப்படியிருக்க அந்த திராட்சத் தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்? அந்த தோட்டக்காரரைக் கொன்று, திராட்சத் தோட்டத்தை மற்றவனுக்கு கொடுப்பான் அல்லவா? வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் என்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அதுவே முக்கிய கல்லுமாயிற்று. அந்த கல்லின் மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிபோவான், அந்த கல் எவன் மேல் விழுகின்றதோ, அது அவனை நசுக்கிப் போடும். போதகரே! நீர் சொல்வதும் போதிப்பதும் நியாயம் என்பது எங்களுக்குத் தெரியும். முகதாட்சண்யம் இல்லாமல் மனிதனுடைய தகுதியை மதிப்பதில்லை என்றும் அறிவோம். ஆனால் நீர் தேவசித்தம் இன்ன தென்று போதிக்கிறீர். நீர் சொல்லும்! நாங்கள் அரசுக்கு வரி செலுத்துவது சரியானதா இல்லை தவறானதா, இதில் எது நியாயம்? ஆண்டவரே கவனமாயிரும், அவன் தந்திரசாலி. ஒரு வெள்ளி நாணயத்தை காண்பியுங்கள். இதிலிக்கிற முகமும் பெயரும் யாருடையது? இராஜாவுடையது! இராஜாவுடையதை நீங்கள் இராஜாவுக்குக் கொடுங்கள். தேவனுடையதை தேவனுக்குக் கொடுங்கள். அதற்கு உங்கள் பதில் என்ன? பஸ்காவை பலியிட வேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து நாம் பஸ்காவை புசிக்க ஆயத்தம் பண்ணுங்கள் என்றார். நான் பாடுபடும் முன்னே உங்களுடனே கூட பஸ்காவை புசிக்க ஆசையாயிருந்தேன். உங்களுக்கு சொல்லுகிறேன், தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி புசிப்பதில்லை. என் தேவனாகிய கர்த்தாவே, சர்வலோக ராஜாவே, திராட்சை செடியிலிருந்து கனியை கொடுப்பவரே, இதை வாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டு கொள்ளுங்கள், தேவனுடைய ராஜ்யம் வரும் அளவும் இதை பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்கு சொல்லுகிறேன். என் தேவனாகிய கர்த்தாவே, சர்வலோக ராஜாவே, பூமியின் பலனில் அப்பத்தை தருபவரே, இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம். என்னை நினைவு கூரும்படி இதை செய்யுங்கள். இந்த பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன் படிக்கையாயிருக்கிறது. ஆனால் இதோ என்னை காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூட பந்தியில் இருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார் ஆனால் காட்டிக் கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ! நானா? அப்படியிருக்க முடியாது! ஆண்டவரே, யாரது? நான் உம்மை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். உங்களில் பெரியவன் சிறியவனைப் போலிருக்கக்கடவன், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக் கடவன், பந்தியிலிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ எவன் பெரியவன்? பந்தியிலிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும் நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனை போல இருக்கிறேன். எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜன பானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்ப்பீர்கள். என்றால் அங்கே வஞ்சகனே இருக்கமாட்டான்! சீமோனே, சீமோனே, இதோ கோதுமையை சுளகினால் புடைக்கிறது போல. சாத்தான் உங்களை புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடி உனக்காக வேண்டிக்கொண்டேன். நீ குணப்பட்ட பிறகு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து. ஆண்டவரே! நான் உம்மோடு சிறைப்படுவதற்கும். மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன். பேதுருவே, இன்று சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று நான் உனக்கு சொல்லுகிறேன். பணப்பையும் சாமான்பையும், காலணியும் இல்லாமல் அனுப்பின போது குறைவிருந்ததா? இல்லை, ஒரு குறைவுமில்லை. பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒன்றை வாங்கக்கடவன். உங்களுக்குச் சொல்லுகிறேன், அக்கிரமக்காரன் எண்ணப்படுவார் என்ற வாக்கியம் நிறைவேற வேண்டியதாய் இருக்கிறது. என்னைப் பற்றிய காரியங்கள் முடிவு பெறும்காலம் வந்திருக்கிறது. ஆண்டவரே! இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது. அது போதும்! மூப்பர்களான மதத்தலைவர்களின் சங்கம் ஒன்றுகூடி எப்படி இயேசுவை ஒழிக்கலாமென ஆலோசித்தனர், அப்பொழுது பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி பிசாசினால் ஏவப்பட்டான். இயேசு ஜெபம் செய்யும் பொருட்டு சீடர்களுடன் ஒலிவ மலைக்குச் சென்றார். நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு ஜெபம் பண்ணுங்கள். யூதாஸ் காரியோத்து 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுக்க துணிந்தான், இயேசுவோ உலக மக்களின் பாவத்திற்காகத் தாம் மரிக்கப் போகும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து மிகுந்த வேதனையோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது. வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. ஏன் தூங்குகிறீர்கள்? எழுந்திருங்கள். சோதனைக்குள்ளாகாதபடி ஜெபம் பண்ணுங்கள். யூதாஸ், மனுஷகுமாரனை முத்தத்தினாலா காட்டிக் கொடுக்கிறாய்? ஆண்டவரே, பட்டயத்தால் நாம் வெட்டுவோமா? வந்து இவனை கைது செய்யுங்கள்; போதும் நிறுத்துங்கள். என்ன அற்புதம் கள்ளனைப் பிடிக்க வருகிறது போல பட்டயங்களையும் தடிகளையும் எடுத்து வந்திருக்கிறீர்களே, நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனே இருக்கையில் என்னை பிடிக்கக் கை நீட்டவில்லை, இதுவோ, உங்களுடைய வேளை. அந்தகாரத்தின் அதிகாரமாயிருக்கிறது. இவனை கைது செய்யுங்கள். காவலில் வை. போர்ச் சேவகர்கள் அவரை முற்றத்திலே கொண்டு போய் துன்புறுத்தி, யூதருடைய ராஜா என்று கூறி பரியாசம் செய்தனர். இது ராஜா அணிந்திருந்த அங்கி! இனி என்ன நடக்கப்போகிறது என்று எங்களுக்குச் சொல்லும் எங்களைக் காப்பாற்ற போகிற ராஜா நீயா? சொல்லு! நீயா எங்களை இரட்சிக்கப் போகிறாய்? இந்த மனிதனும் இயேசுவோடு இருந்தவன் தான், அம்மா, எனக்கு அவரைத் தெரியாது. இவர்களை நான் ஒன்றாக பார்த்திருக்கிறேனே! நாங்கள் உனது பணிவான வேலையாட்கள். எங்களை பார்ப்பதற்கு உமக்கு எப்படித் தெரிகிறது? நீயும் அவர்களில் ஒருவன்தானே? இல்லை, நான் இல்லை! இந்த மனுஷன் இயேசுவுடன் இருந்தவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதுவும் இவன் கலிலேயன். ஏய்! நீ போ. நீ என்ன சொல்லுகிறாய் என்றே எனக்கு புரியவில்லை. இயேசு திரும்பிப் பேதுருவை நோக்கிப் பார்த்தார். உடனே பேதுரு, சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தான். ஆண்டவரே! உம்மை மறுதலித்துவிட்டேன். உம்முடைய வல்லமையையும் உம்முடைய அன்பையும் புரிந்துகொள்ளாமல் உமக்கு துரோகம் செய்துவிட்டேன். என்னை மன்னியும், ஆண்டவரே! ஆண்டவரே, உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்; என்னை தயைகூர்ந்து மன்னியுங்கள். உம்முடைய அன்பிலிருந்து என்னை விட்டு விடாதேயும், என்னை இரட்சியும் ஆண்டவரே, என்னுடைய இருதயத்தை பரிசுத்தமாக்கும். உமக்கு கீழ்ப்படிய கற்றுத்தரும். ஆண்டவரே! உன்னை அடித்தது யார் சொல்லு? உன்னை அடிக்கப்போவது யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல். நிறுத்துங்கள்! நான் சொல்கிறேன், நிறுத்துங்கள்! ஆலோசனை சங்கத்திற்கு அழைத்து வாருங்கள். நட. இயேசுவை விசாரணை செய்ய மதத்தலைவர்களின் சங்கம் கூடியது. சொல்லும், நீர்தான் அந்த மேசியாவா? நான் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் சொல்லமாட்டீர்கள். இது முதல் மனுஷகுமாரன் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பார். அப்படியானால், நீ தேவகுமாரனா? நீர் சொன்னபடி நான் அவர் தான். அதைச் சொல்ல அவனுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்? அவன் தேவதூஷணம் சொல்கிறான். குற்றவாளி! இவன் சொன்னதைத்தான் நாம் அனைவரும் கேட்டோமே! இவனை நாம் பிலாத்துவிடம் கொண்டு செல்வோம். ஆம்! ஆம்! அப்படியே செய்வோம். நட. பிலாத்து, ஆயிரக்கணக்கானவர்களைச் சிலுவையில் அறைந்து கொன்ற மிகக் கொடிய ரோம ஆட்சியாளன். இயேசுவை அவனிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இந்த அதிகாலை நேரத்தில் இங்கு உங்களுக்கு என்ன வேண்டும்? இவன் ஜனங்கள் மத்தியில் கலகமுண்டாக்கினதால் பிடித்து வந்தோம்……… இவன் தேவாலயச் சந்தையிலே கலகமுண்டாக்கினான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்? இவனை தண்டியும். இந்த மனுஷனைத் தண்டிக்க இவனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை. இவன் குற்றவாளி என்று நாங்கள் கண்டுபிடித்தோம், ராஜாவுக்கு வரி கொடுக்க வேண்டாம் என்றும், தன்னையே மேசியா என்றும், தான் ஒரு ராஜா என்றும் சொல்லுகிறான். ராஜா! அதுவும் நீ! யூதருடைய ராஜாவா? நீர் சொல்லுகிறபடியே. இவன் கலிலேயா நாடு தொடங்கி இப்பொழுது இங்கேயும் வந்துவிட்டான். ஆ….. கலிலேயாவிலா? இந்த மனிதன் கலிலேயனா? அப்படியென்றால், இவனை நாம் ஏரோதிடமே ஒப்படைப்போம். அவன் இன்னும் எருசலேமில் இருக்கிறான் அல்லவா? ஏரோதிடமே கொண்டு போங்கள். நீ உன்னை யாரென்று சொல்கிறாய்? நீ சீஷர்களென்று அழைப்பவர்கள் யார்? நீ அநேக அற்புதங்களைச் செய்வதாக கூறுகிறார்களே. எங்கே எனக்கு செய் பார்ப்போம். அரசே, இவன் ஜனங்களை ஏமாற்றி, வசப்படுத்தி, தன் பட்சமாக்கி கொண்டு, தன்னையே ஒரு ராஜா என்கிறான். இந்த மனுஷனா? இராஜாவா? ஆ…………… எங்கள் அரசே, இவனை நன்றாக அடியுங்கள். இவனை பிலாத்துவிடமே அழைத்துச் செல்லுங்கள், இது அவனுடைய ஆட்சிக்குட்பட்டது. இந்த மனுஷன் மரண தண்டனைக்கு ஏதுவாக ஒன்றும் செய்யவில்லை ஆகையால் இவனை சாட்டையால் அடிப்பித்து விடுதலையாக்குகிறேன். பண்டிகைதோறும் ஒரு குற்றவாளியை எங்களுக்கு விடுதலையாக்குவது உமது கடமை அல்லவா? எங்களுக்காக பரபாசை விடுதலை செய்யும். ஆம்! பரபாசை! இந்த மனிதனை தீர்த்துவிடும். பரபாசை எங்களுக்காக விடுதலை செய்யும். அவனை சிலுவையில் அறையும். ஆம்! நீங்கள், இவனை சாட்டையினால் அடியுங்கள்! இவனை சிலுவையில் அறையும்! இவனை சிலுவையில் அறையும்! பிலாத்துவே, நீர் ஏன் தாமதிக்கிறீர்? அவர் இயேசு! அவரே மேசியா! அவரை விட்டுவிடுங்கள். அவர் ஒரு தவறும் செய்யவில்லையே! அவனைத் தூக்கி விடு. இயேசுவை சிலுவையில் அறைய வேண்டுமென்று மிகுந்த சத்தமிட்டுக் கொண்டேயிருந்தார்கள், இதனால் பிலாத்து கலகத்தினிமித்தமும், கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் வைக்கப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி இயேசுவையோ சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான். ஏய், உன் பெயர் என்ன? சிரேனே என்னும் ஊரை சேர்ந்த சீமோன். வா இப்படி. கயிறை வெட்டு. ஏய் நீ, இதை தூக்கு, சீக்கிரம் போ! ஆண்டவரே! நாங்கள் உமக்காக அழுகிறோம்! குடியும், ஆண்டவரே, இதைக் குடியும். குடியும் ஆண்டவரே. எருசலேமின் குமாரத்திகளே! நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள், பச்சை மரத்துக்கு இவைகளைச் செய்தால் பட்டமரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்? தேவன் உமக்கு உதவி செய்வார். நாங்கள் உமக்காக ஜெபிக்கிறோம். ஆணி அடியுங்கள்! மேலே உயர்த்துங்கள்! வேகமா அடி! கயிற்றை வெளியே இழுங்கள். பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறார்களே! இவன் மற்றவர்களை காப்பாற்றினான், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளட்டும். ஆம், நீ மேசியாவானால் உன்னை நீயே இரட்சித்துக் கொள், எங்கே சிலுவையிலிருந்து இறங்கி வா. எங்கே, உமது அற்புதங்களில் ஒன்றைக் காட்டு பார்ப்போம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவனின் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட தீர்க்க தரிசனம் நிறைவேறும்படி இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். இது ஒரு சாதாரண மனிதனின் அங்கியே அல்ல. நில்லுங்கள், நில்லுங்கள். கிழித்து விடாதீர்கள், நான் சொல்வதை கேளுங்கள். நாம் சீட்டு போட்டு பார்ப்போம். ஆமாம்,சீட்டுப்போட்டு பார்ப்போம். ஆ, நீ ஜெய்ச்சிட்ட! இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்? இவன் யூதருடைய ராஜா என்று எழுதிய வாசகம் அவரது தலைக்கு மேலாக வைக்கப்பட்டது. நீ யூதருடைய ராஜாவானால் உன்னை நீயே இரட்சித்துக் கொள். நீர் மேசியா என்றால், உன்னையே நீ இரட்சித்துக் கொள். எங்களையும் இரட்சியும் நீ தேவனுக்கு கூட பயப்படுகிறதில்லையா? நீ பெற்ற அதே தண்டனையை அவரும் பெற்றிருக்கிறார், அவர் தவறேதும் செய்யவில்லை. இயேசுவே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும். மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன், இன்றைக்கு நீ என்னுடனே பரதீசில் இருப்பாய். நடுப்பகலாயிருந்த அந்நேரத்தில் 3 மணி நேரம் வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. தேவாலயத்தின் திரைச் சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. பிதாவே, உம்முடைய கைகளில், என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நடந்த சம்பவங்களைக் கண்ட சேனைத்தலைவன் தேவனை மகிமைப்படுத்திக் கூறியதாவது……… தேவனுக்கே மகிமையுண்டாவதாக! மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமான் தான். உத்தமனும், நீதிமானுமாயிருந்த அரிமாத்தியா ஊரை சேர்ந்த யோசேப்பு, யூதர்களின் மத ஆலோசனை சங்கத்தின் செய்கைக்கு உடன்படாதவனாக இருந்தான். அவன் ஓய்வு நாள் தொடங்குவதற்கு முன்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கல்லறையில் வைக்க அனுமதி பெற்றுக் கொண்டான். ஐயா, கர்த்தரின் சரீரத்திற்கு கந்தவர்க்கங்களையும், பரிமள தைலத்தையும் ஆயத்தம் செய்கிறோம். எல்லோரும் வாருங்கள், வாருங்கள். ஓய்வு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் பண்ணின வாசனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு, கல்லறை இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதை கண்டார்கள். உள்ளே நுழைந்த அவர்கள் அங்கு பார்த்தபோது, ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார், மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயா நாட்டில் இருந்த போது உங்களுக்குச் சொன்னதை நினைவு கூருங்கள். கேளுங்கள்! கல் புரட்டித் தள்ளப்பட்டிருந்தது! நாங்கள் உள்ளே சென்றோம். இயேசுவின் சரீரத்தை அங்கு காணவில்லை. என்ன? இயேசுவின் சரீரத்தைக் காணவில்லையா? மேலும் இரண்டு தூதர்கள் எங்கள் முன் தோன்றி, சூரியனைப் போல் பிரகாசித்து, உயிரோடிருக்கிறவரை நீங்கள் எதற்காக மரித்தவர்கள் மத்தியில் தேடுகிறீர்கள் என்றார்கள். இது உண்மை. எங்களை நம்புங்கள், நம்புங்கள்! நாங்கள் அவர்களைக் கண்டோம், நீங்களும் போய் பாருங்கள், கல்லறை காலியாக உள்ளது, நமது ஆண்டவர் அங்கு இல்லை, அவர் உயிரோடு எழுந்து விட்டார். பேதுரு!நான் சொல்வதை நீ நம்பு. இயேசு தம்முடைய சீஷர்களில் இருவருக்கு தரிசமானார், அவர்கள் பரவசத்துடன் வந்து மற்றவர்களிடம் கூறினார்கள். மெய்யாகவே நமது ஆண்டவர் உயிர்த்தெழுந்தார். சீமோனுக்கு அவர் தரிசனமானார். வரும் வழியில் அவரை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் அப்பம் பிட்டபோதோ, நாங்கள் அவரை அறிந்து கொண்டோம். எம்மா ஊரிலா? ஆச்சரியமா இருக்கே! சமாதானம் உண்டாவதாக! நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள், உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? பாருங்கள் என் கைகளையும், கால்களையும்! நான்தான் என்றறியும் படிக்கு என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்பும் இருப்பது போல ஒரு ஆவிக்கு இராதே. நான் உங்களோடிருந்த போது உங்களுக்கு சொன்ன விசேஷம் இதுவே. மோசேயின் நியாயப் பிரமாணத்திலும், தீர்க்கதரிசன ஆகமங்களிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்தவை நிறைவேற வேண்டியதே. கிறிஸ்து பாடுபட்டு, மரித்து மூன்றாம் நாளில் எழ வேண்டும் என்று எழுதியிருக்கிற யாவும் நிறைவேற வேண்டியதே. அவருடைய நாமத்தினாலே மன்ந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். நீங்கள் இவைகளைக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ உங்களுக்கு அனுப்புகிறேன், பரத்திலிருந்து வரும் வல்லமையினால் பெலன் அடையும்வரை நீங்கள் எருசலேமில் காத்திருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள், நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள், இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். பாவிகளை ரட்சிப்பதற்கும் அவர்களை தேவனிடத்தில் திருப்புவதற்கும் தேவன் மேசியாவை அனுப்புவார் என்று தீர்க்கதரிசிகள் நீண்ட காலத்திற்கு முன்பே வேதத்தில் எழுதினார்கள். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனை பெறுவாள் உரை என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி இது நடந்தது. மரியாள் கன்னிகையாக இருந்தபோது தேவனுடைய வல்லமையால் கர்ப்பபதியாகி இயேசுவை பெற்றெடுத்தாள். வேதத்தில் எழுதி இருக்கிற படி அந்த குழந்தை தான் மேசியா என்பதற்கு தேவனுடைய அடையாளமாக இயேசுவின் அதிசயமான பிறப்பு இருந்தது. தேவன் இயேசுவை அவருடைய சொந்த குமாரன் என்று அழைக்கிறார். மக்கள் இயேசுவை கண்டபோது தேவனின் தன்மையையும் மற்றும் வல்லமையையும் கண்டார்கள். அவர் ஜனங்களை சுகமாக்கி அவர்களின் பாவங்களை மன்னித்தார். அவர்களுக்கு நித்திய வாழ்வை தருவதாக வாக்களித்தார். எல்லா மனுக்குலத்தின் பாவத்திற்கு பதிலாக இயேசு தம் வாழ்க்கையை பலியாக அர்ப்பணித்து பாவத்தின் தண்டனையை ஏற்றுக் கொண்டார். அவர் மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம் அவருடைய வல்லமை மரணத்தின் வல்லமையை விட சிறந்தது என்று காட்டினார். மேசியாவாகிய இயேசு என்னுடைய ஜீவனை கொடுக்கவும் அதை மறுபடியும் எடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு என்றார். இயேசுவினுடைய வாழ்க்கையானது தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டபடியே நிறைவேறினபடியால் பரிசுத்த வார்த்தையானது குறையற்றது மற்றும் நித்தியமானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இயேசு தான் தேவனின் வார்த்தை, இயேசுவில் தேவன் தன்னை உலக ஜனத்திற்கு வெளிப்படுத்தினார். தேவன் முதல் மனுஷனையும் மனுஷியையும் பரிபூரணமாக படைத்தார். ஆனால் அவர்கள் தேவனை நம்பவும் இல்லை, அவருக்கு கீழ்படியவும் இல்லை. ஆகவே இயேசு பரிபூரண வாழ்வை கொடுக்க வந்தார். எல்லோரும் பாவம் செய்து உள்ளார்கள், பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பாவம் செய்கிற ஜனங்கள் தேவனோடு உறவு கொண்டு வாழ முடியாது. ஆனால் தேவன் ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பலியாக கொடுத்ததை போல தேவன் இயேசு கிறிஸ்துவை ஆதாமின் சந்ததியருக்கு பதிலாக கொடுத்தார். யார் எல்லாம் இயேசுவின் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கிறார்களோ, அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் வரும்படி இதைச் செய்தார். அதனால் யாரெல்லாம் இயேசுவை விசுவாசித்து பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தண்டனையிலிருந்து தப்பி, தேவனோடு நித்தியமாய் வாழ்வார்கள். இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது அவரை பின்பற்றுகிறவர்களிடம் சொல்லியது: ஜனங்கள் எல்லா தேசத்திலும் என்னுடைய நாமத்தை அறிவிப்பார்கள், யாரெல்லாம் மனந்திருந்தி தேவனிடம் வருகிறார்களோ அவர்களை மன்னிக்கிறார். அவரை பின்பற்றுகிறவர்களோடு இருக்கும்படிக்கும், சத்தியத்தை காண்பிக்கும்படிக்கும், தேவனின் வழிகளை பின்பற்ற வல்லமையையும் கொடுக்க பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக இயேசு சொன்னார். எப்போது பாவியான பெண் மனம்திருந்தி இயேசுவைப்பின் தொடர்ந்தாளோ அப்போது இயேசு அவரிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றும், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றும் சொன்னார். யார் வேண்டுமானாலும் தேவனுடைய கிருபையால் இயேசுவின் மீது உள்ள விசுவாசத்தை கொண்டு இரட்சிப்படைய முடியும். இயேசு மட்டுமே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடையவர். யாரெல்லாம் இயேசுவை பின்பற்றி வர தீர்மானித்திருக்கிறார்களோ, அவர்கள் பின்வரும் விசுவாச வார்த்தைகளை பயன்படுத்தி அவரோடு உறவு கொள்ள முடியும். பிதாவாகிய தேவனே நீர் நீதிபரர், நீர் என்னை நேசிப்பதற்காக நன்றி! நான் உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் பாவம் செய்ததற்காக வருந்துகிறேன் நீர் எனக்கு பதிலாக இயேசுவை அனுப்பி, சிலுவையில் மரிக்கச் செய்ததற்காகவும் அவர் உயிரோடு எழுந்ததற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் செய்த பாவத்திற்காக இயேசு தண்டனை பெற்றதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்முடைய வழியை பின்பற்ற விரும்புகிறேன். இயேசுவை என் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய பாவங்களை மன்னித்ததற்காகவும், உம்மோடு கூட நித்திய ராஜ்யத்தில் சேரும்படிக்கு எனக்கு நீர் வழியை திறந்ததற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கவும் உம்முடைய வழியை காண்பிக்கவும் உம்மை வேண்டுகிறேன். உம்மை நேசிப்பதற்கு எனக்கு வல்லமையையும், உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு பலமும் தருவீராக! சகல தேசத்திலும் உள்ள ஜனங்கள் உம்மை துதிப்பார்களாக. ஆமென். தன்னை பின்பற்றுகிறவர்களை குறித்து இயேசு சொன்னது: என் ஆடுகள் என் சத்தத்தை கேட்கும். நான் அவைகளை அறிவேன், அவைகள் எனக்கு பின் வருகிறது. இயேசுவை பின்பற்றுகிறவர்கள் ஒன்றாக கூடுவார்கள். தினந்தோறும் அவருடன் பேசுவார்கள், வேதத்தில் அவருடைய வார்த்தைகளை வாசித்து, அவருடைய மாதிரிகளை பின்பற்றுவார்கள். அவரை குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் இருதயத்தில் வாசம்பண்ணுகிற தேவ ஆவியானவரின் வல்லமையினால் அவர்களை இயேசு பலப்படுத்தி வழி நடத்துவார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்.
JesusFilm